Monday, May 27, 2013

எதை எழுதுவது? எப்படி எழுதுவது?

எதை எழுதுவது? எப்படி எழுதுவது?

எழுத வேண்டும் என தோன்றுகிறது... நிறைய எழுத வேண்டும்...

ஆனால் எதை, எப்படி?
என் கடந்த காலத்தை எழுதவா? அது அப்படி ஒன்றும் வரலாறு அல்ல, இத்தளத்தில் கொட்ட ஏதும் சிறப்பானது இல்லை.

சரி! அப்படி என்றால் என் நிகழ் காலம் பற்றி எழுதவா? ம்ம்ம்.. இன்று வாழ்கிறேன், அதில் செயற்கரிய சாதனை ஏதும் செய்து விடவில்லை..

எதிர்காலம் பற்றியாவது.....? அது தற்போது என் கையில் இல்லை. கனவுகளை எழுத நான் கலாம் இல்லை!

ஆக என்னை பற்றி எழுத ஏதும் இல்லாத வேளையில், எதை எழுதுவது என்ற சிந்தனை என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இன்று ஒரு கடிதம் வரைய சொன்னார் என் மேலாளர், ஒரு செயலுக்கான கடிதம். நான் பேனா எடுத்தேன், யோசித்தேன். பிறகு வார்த்தை வரவில்லை என்று ஒரு எழுத்து கூட எழுதாமல் கொடுத்து விட்டேன்.

ஏன் என்னால் எழுத முடியவில்லை என்று யோசிக்கும் வேளையில் அக்கடிதம் வேறு ஒருவரால் எழுதப்பெற்று என் பார்வைக்கு வந்தது. சற்றே மனவருத்தம்.

அப்போதைய முடிவு தான் இப்பதிவிற்கான பிள்ளையார் சூழி!

இப்போது சொல்லுங்கள்.... எதை எழுதுவது? எப்படி எழுதுவது?